உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு மேடையில் முக்கியமான பெரிய தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளின் வரிசைகள் A1, A2, A3, B1, B2, B3 என சில பிரிவுகளை பார்த்து வியந்தேன்.  ஏனென்றால் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டிலேயே தமிழை பயன்படுத்த இயலாதவர்களாகவே தமிழர்கள் உள்ளனர்.  ஏன் அதை அ1, அ2, அ3 மற்றும் ஆ1, ஆ2, ஆ3 என ஒதுக்கி இருக்கலாம்.  

தமிழனே தமிழை ஒதுக்கினால் தமிழ் எப்படி உயரும்.  தமிழை தமிழ் நாட்டில் மிகச்சிறப்பாக உபயோகித்து நாம் முன்னோடியாக இருந்து தமிழ் வாழ பாடுபடவேண்டும் என்பதே என் ஆவல்.  மாநாடு நடப்பதில் ஆனந்தம் அடைந்தாலும் அதன் நோக்கம் நிறைவேறும் விதம் பற்றி யாரும் யோசிக்கவில்லை.  நமது சென்னை மேயர் அவர்களின் விளம்பர பலகை முயற்சி போல எல்லா இடங்களிலும் தமிழை பயன்படுத்த முயற்சி செய்யவேண்டும். 

அதேபோல உண்மையான உள்ளபூர்வமான தமிழார்வம் கொண்டு தனது குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் வைக்க முனையவேண்டும் என்பதே என் விருப்பம். 
அதேபோல மக்களின் நலன் கருதி தமிழ் பெயர் வைப்பவர்களுக்கு ஊக்கப்படுத்தவேண்டும்.   தமிழ் மொழியில் படிப்பவர்களுக்கு இளநிலைபட்டப்படிப்பில் குறைந்த மதிபெண்ணிலேயே படிக்க ஆவனசெய்யவேண்டும். 

இன்னும் வரும். 

0 comments