தமிழ் வளர்ச்சியில் இளைய தலைமுறையும் முனைப்போடு செயல்படுகிறது என்பதற்கான உதாரணம் சுபாஷினி! முன்னணி கணினி நிறுவனமான ஹெச்.பி யின் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் சுபாஷினிக்கு தமிழ் மீது அளவில்லாத காதல் இருக்கிறது. பல தலைமுறைகளுக்கு முன்பே தமிழகத்திலிருந்து சுபாஷினியின் குடும்பம் மலேசியாவில் குடி ஏறிவிட்டாலும் தமிழ் கலாச்சாரத்தின் மீதான பிடிப்பு மட்டும் குறையவில்லை.  தமிழரின் புகழைச் சொல்லும் வரலாற்று ஆவணங்களை பாதுகாக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு கடந்த 2001- ம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை என்கிற அமைப்பினை உருவாகியிருக்கிறார்.  

அவர் வசிக்கும் ஜெர்மனி அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.  இங்குள்ள மக்கள் தங்களின் காலை, கலாச்சாரம் மீது அத்தனை ஈடுபாடு காட்டுவார்கள்.  தங்கள் பெருமைகளை பாதுக்காக்க வேண்டும் என நினைப்பார்கள்.  எந்த ஒன்றையும் மேம்போக்காக செய்யாமல் முழு ஈடுபாட்டோடு செய்வார்கள்.  எங்கள் குடும்பம் மலேசியாவுக்கு குடி ஏறிவிட்டாலும் தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றி வந்தது.  எனக்கும் தமிழ் மீது அதிக ஆர்வம் இருந்தது.  அந்த ஆர்வம்தான் என்னை இயங்க வைக்கிறது. 

உலகில் எல்லா பொருட்களும் அழிகின்றன.  உருமாறுகின்றன.  கால ஓட்டத்தை எதிர்த்து ஒன்றை தக்க வைப்பது மிகக்கடிமான ஒன்றாகவே இருந்து வருகிறது.  அனாலும் இராமாயணமும், மகாபாரதமும் மரபு வழியாக தொடர்ந்து வருகிறது.  காலம், காலமாக கொட்டுவமேலமும், தெருக்கூத்தும் பார்த்து வருகிறோம். இந்த வடிவங்களின் மூலமாகவும் நம்முடைய தமிழ் மரபு காப்பாற்றப்பட்டு வருகிறது.  200 ஆண்டுகள்ளுக்கு மேல் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைபடுத்திய போதும் நம் பண்பாடு தாக்குபிடித்து நின்றிருக்கிறது.  இப்படிப்பட்ட பாரம்பரியத்தை, பண்பாட்டை, தமிழ் மரபினை பாதுகாக்க வேண்டும் என்று நனைத்துதான் தென்கொரியாவில் வசிக்கும் முனைவர் நா.கண்ணன், சுவிட்சர்லாந்தில் வசிக்கும் முனைவர் கு.கல்யாணசுந்தரம் ஆகியோர் சேர்ந்து தமிழ் மரபு அறக்கட்டளையை உருவாக்கினோம்.  நாங்கள் வெவ்வேறு நாடுகளில் வசித்தாலும் எங்களை தமிழ் இணைத்ததாக சுபாஷினி கூறினார். 

தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக பல முக்கியமான தமிழ் நூல்களை மின் பதுப்புகளை மாற்றியிருக்கிறோம்.  தமிழின் புராதனமான ஓலைச்சுவடிகளையும் மின் பதிப்புகளாக்கியிருகிறோம்.  இதற்காக அவ்வப்போது தமிழகத்திற்கு வந்து பழங்கால ஓலைச்சுவடிகள் கிடைத்தன.  அழகான சித்திர சுவடிகள் கிடைத்தன.  நிறைய சைவ மடங்களுக்கு சென்றோம்.  அந்த மடங்களில் நிறைய ஓலைச் சுவடிகள் கிதத்தன.  ஓலைச்சுவடிகள் நம்முடைய மிகப் பெரும் சொத்துகள்.  நம்முடைய பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவம் குறித்த ஓலைச்சுவடிகள் எல்லாம் பாதுக்காக்கப்பட வேண்டும்.  அவர்மேலும் நம்முடைய பாரம்பரியத்தை சொல்லும் ஓலைச்சுவடிகளையும், நூல்களையும் மின் பதிப்பாக்குவதொடு அவற்றை பிற மொழிகளில் நூலாக்கம் செய்வதும் அவசியம் என்றார். 

தமிழின் தொன்மை பற்றிய சிறப்புகள் பிற நாட்டவர் அறியச் சய்வது அவசியம்.  ஆனால் 90 சதவீத மக்களுக்கு நம்முடைய ஓலைச்சுவடிகளின் அருமை தெரிவதில்லை.  பரம்பரை, பரம்பரையாக சிலர் வீடுகளில் இந்த ஓலைச்சுவடிகள் சிலர் வீடுகளில் இந்த ஓலைச்சுவடிகள் இருக்கின்றன.  அவை பாதுக்காக்கப்படாமல் சிதையும் நிலையில் இருக்கின்றன.  குறிப்பாக மருத்துவம் சார்ந்த ஓலைச்சுவடிகளை பிறருக்கு தரக்கூடாது என்கிற எண்ணமும் இருக்கிறது.  இவற்றை அடுத்த பல தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல மின் பதிப்பாக்குவது அவசியம்.  எனவே பழம்பெருமை வாய்ந்த ஓலைச்சுவடிகளையும், நூல்களையும் வைத்திருப்பார்கள் அல்லது அது பற்றி அறிந்தவர்கள் எங்களுக்கு தெரியபடுத்தி உதவலாம் என்றார்.

யாராவது உதவ நினைத்தால் இங்கே தெரிவிக்கவும். மற்றும் சுபாஷினி அவர்களின் ஈமெயில் ஐடி தெரிந்தவகள் இங்கே தெரிவிக்கவும். அவருக்கு உதவவே இந்த வலை எழுதப்பட்டது. நன்றி. 

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு மேடையில் முக்கியமான பெரிய தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளின் வரிசைகள் A1, A2, A3, B1, B2, B3 என சில பிரிவுகளை பார்த்து வியந்தேன்.  ஏனென்றால் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டிலேயே தமிழை பயன்படுத்த இயலாதவர்களாகவே தமிழர்கள் உள்ளனர்.  ஏன் அதை அ1, அ2, அ3 மற்றும் ஆ1, ஆ2, ஆ3 என ஒதுக்கி இருக்கலாம்.  

தமிழனே தமிழை ஒதுக்கினால் தமிழ் எப்படி உயரும்.  தமிழை தமிழ் நாட்டில் மிகச்சிறப்பாக உபயோகித்து நாம் முன்னோடியாக இருந்து தமிழ் வாழ பாடுபடவேண்டும் என்பதே என் ஆவல்.  மாநாடு நடப்பதில் ஆனந்தம் அடைந்தாலும் அதன் நோக்கம் நிறைவேறும் விதம் பற்றி யாரும் யோசிக்கவில்லை.  நமது சென்னை மேயர் அவர்களின் விளம்பர பலகை முயற்சி போல எல்லா இடங்களிலும் தமிழை பயன்படுத்த முயற்சி செய்யவேண்டும். 

அதேபோல உண்மையான உள்ளபூர்வமான தமிழார்வம் கொண்டு தனது குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் வைக்க முனையவேண்டும் என்பதே என் விருப்பம். 
அதேபோல மக்களின் நலன் கருதி தமிழ் பெயர் வைப்பவர்களுக்கு ஊக்கப்படுத்தவேண்டும்.   தமிழ் மொழியில் படிப்பவர்களுக்கு இளநிலைபட்டப்படிப்பில் குறைந்த மதிபெண்ணிலேயே படிக்க ஆவனசெய்யவேண்டும். 

இன்னும் வரும். 

மறத்தமிழ்

Posted by கை.க.சோழன் | 7:36 AM

மறத்தமிழ் சொல்லும் தமிழனின் பார்வை இங்கே உங்களுக்காக.  என் தமிழ் மறத்தமிழ் 


வள்ளுவனின் குறள்


கம்பனின் காவியம் இராமாயணம் 


இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் 


தொல்காப்பியத்தின் வரலாறு 


செந்தமிழின் ஆரம்பகால சித்தாந்தங்கள் இங்கே விவரிக்க முயல இருக்கிறேன் 


என்னுள் புதைந்து கிடக்கும் தமிழார்வத்தை வெளிக்கொணரும் முயற்சி இது.